செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Modified: சனி, 19 அக்டோபர் 2019 (15:17 IST)

மகரம்: ஐப்பசி மாத ராசி பலன்கள்

கிரகநிலை: பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் - ரண, ருண, ஸ்தானத்தில் ராஹூ -  பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய்  -  தொழில் ஸ்தானத்தில்  சூர்யன், புதன்(வ),  சுக்ரன்  -  லாப ஸ்தானத்தில்  குரு - அயன, சயன,  போக ஸ்தானத்தில் சனி, கேது  என கிரகங்கள் வலம்வருகின்றன. 
 
கிரகமாற்றங்கள்:
 
29-Oct-19 அன்று காலை 3.49 மணிக்கு குரு பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
29-Oct-19 அன்று  இரவு 7.22 மணிக்கு சுக்கிர பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
11-Dec-19 அன்று  மாலை 6.21 மணிக்கு செவ்வாய் பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
 
பலன்:
 
மிடுக்கான நடையை நடந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் மகர ராசி அன்பர்களே, இந்த மாதம்  மனதில் தைரியம் உண்டாகும். எதிலும் தயக்கமோ, பயமோ ஏற்படாது. தனது நேர்மையாலும் ஒழுக்கத்தாலும் அனைத்து காரியங்களையும் சாதிக்கும் திறன் ஏற்படும்.
 
குடும்பத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. நீங்கள் பேசும் வார்த்தைகள் மற்றவர்களுக்கு அக்னியைப் போல சுடலாம். ஆனால் வார்த்தைகள் வழிகாட்டும் ஒளி நிறைந்திருக்கும. நல்ல செய்கைகளினால் மட்டுமே புகழை தக்க வைக்க முடியும். வீடு மனை வாகன வகைகளில்  திருப்தியான நடைமுறைகள் இருக்கும். உங்களுக்கு துரோகம் செய்தவர்கள் வெட்கி தலைகுனிந்து திரும்பி போய்விடுவார்கள். கணவன்  மனைவி ஒற்றுமை சிறக்கும்.
 
தொழிலில் பயணங்களால் பொருள்சேர்க்கை ஏற்படும். சகோதரத்தின் வெளிநாடு பயணம் இனிதே நடைபெறும். சுயசார்பும் தன்னிறைவும் பெறுவீர்கள். தைரியம் பளிச்சிடும். நேரத்திற்கு உணவருந்த முடியாமல் போகலாம். அதற்கு நேரத்தை ஒதுக்குங்கள்.
 
உத்தியோகஸ்தர்கள் வெளிநாட்டில் பணிபுரியும் அன்பர்களுக்கு அரசு அனுகூலம் உண்டு. கடன்களிலிருந்து விடுபடவும் உகந்த நேரமிது. வேலை மாற்றம் உறுதிபடுத்தப்படுகிறது.  ஊதிய உயர்வுடன் கூடிய பணி இட மாற்றம் உண்டு.
 
பெண்கள் வாழ்வில் குதூகலம் பிறக்கும். இல்லத்தில் அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கப் பெறும். உறவினர்கள் வீட்டு விசேஷங்களுக்கு  சென்று வருவீர்கள். மக்கட் பேறு சிலருக்கு உண்டாகலாம்.  வேலைக்குச் செல்லும் பெண்கள் ஓய்வில்லாமல் உழைக்க வேண்டி வரலாம்.
 
கலைத் துறையினர் கலைத்துறையினருக்கு ஓரளவு முன்னேற்றம் கிடைக்கும். தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு வெளிநாடு வாய்ப்புகள் வரலாம். அதிலும் கலைத்துறையில் டெக்னிக்கல் சம்பந்தப்பட்ட துறைகளில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள்  குவியும். 
 
அரசியல் துறையினர் விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். மாணவர்கள் கேளிக்கைகளில்  ஈடுபட மனம் ஏங்கும். எச்சரிக்கை தேவை.  அவமானங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
 
உத்திராடம் 2, 3, 4 பாதம்:
 
இந்த மாதம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. அதிகம் பேசுவதை தவிர்த்து செயலில் வேகம் காட்டுவது நல்லது. அடுத்தவர் கூறுவதை  செய்யும் முன்பு அது பற்றி ஆலோசனை செய்வது நல்லது. மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய கூடுதல் கவனத்துடன் படிப்பீர்கள்.  புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாக  பொழுதை கழிப்பீர்கள். 
 
திருவோணம்:
 
இந்த மாதம் பணத்தட்டுப் பாடு நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை உண்டாகும். அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. மனதில் தைரியம் உண்டாகும். வீண்வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது நல்லது. உடல்நிலையை  அவ்வப்போது கவனித்துக் கொள்ளுங்கள்.முன்பு தடைபட்ட காரியங்கள் எவ்வித இடையூறுமின்றி நடந்து முடியும்.
 
அவிட்டம் 1,2 பாதம்:
 
இந்த மாதம் தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள்  சாதூரியமான பேச்சின் மூலம் தங்களது வியாபாரத்தை லாபகரமாக செய்வார்கள். தேவையான பண உதவியும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிக உழைப்பும் அதற்கேற்ற பலனும் உண்டாகும். எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நன்மை தரும். பெண்களுக்கு மனதெளிவு உண்டாகும். சிக்கன நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்கள்.  கோபத்தை குறைப்பது நன்மை தரும்.
 
பரிகாரம்:
 
ஸ்ரீ ஹயக்கீரீவரை வழிபடுவதும், விநாயகரை வழிபடுவதும் நன்று. 
அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி
சந்திராஷ்டம தினங்கள்: அக்டோபர் 24, 25
அதிர்ஷ்ட தினங்கள்: அக்டோபர் 18; நவம்பர் 13, 14, 15